இந்தியாவின் பிரபல தென் இந்திய தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடவுள்ள பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மலையக மாணவியான ஆஷினி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவை, நயப்பன தமிழ் வித்தியாலய மாணவியான ஆஷினி இன்று தமிழகம் நோக்கி புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி ஆஷினி இயல்பாகவே சிறப்பாக பாடும் திறனை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நயப்பன தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற பழைய மாணவர் சங்க கூட்டத்தின் நிகழ்வொன்றின்போது குறித்த மாணவி பாடிய பாடல் வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது,
மலையகத் தமிழர்களின் அடையாளமாக அதுவும் பெருந்தோட்ட தொழிலாளியின் பிள்ளையொருவர் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள குறித்த இசை நிகழ்வில் பங்கேற்பது மலையக மண்ணுக்கு பெருமை என சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.