யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் புதன்கிழமை (21) அன்றும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அல்லைப்பிட்டி பகுதியில் கட்டுமானங்களின் போது மண்டை ஓட்டு துண்டுகளும் இரு எலும்புகளும் மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஊர்காவற்துறை பொலிஸார் குறித்த பிரதேசத்தை குற்றம் நிகழ்ந்த பிரதேசமாக அடையாளப்படுத்தி நீதிமன்ற கட்டளையை பெற நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற கட்டளையினை பெற்று ஊர்காவற்துறை நீதிவான் கஜநிதிபாலன் முன்னிலையில் குறித்த குழி மேலதிகமாக அகழப்பட்டது.
இதன்போது 27 பற்கள் உட்பட ஒரு மனித எலும்புகூடு எச்சம் மீட்கப்பட்டிருந்த நிலையில் மேலதிகமான எச்சங்கள் இல்லாத நிலையில் குறித்த சான்று பொருள் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 20 வருடங்கள் முன்னரான மனித எச்சமே இது என கருதுவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.