இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம் உள்ளது.
இதன்படி குறித்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 25ம் திகதி நடைபெற உள்ள நிலையில், தற்போது அதற்கான கிரியைகள் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.
5 இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அழகிய ஆலயமாக புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம் வர்ணிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய திருக்குடமுழுக்கு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது.