இலங்கையில் நாளொன்றில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாள் நேற்றாகும். நேற்று (9) மட்டும் 976 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில் 971 நபர்கள் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகளுக்குள் இருந்து நான்கு நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். குவைத்திலிருந்து திரும்பி வந்தவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 71,211 ஆக உயர்ந்தது.
912 நபர்கள் நேற்று கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65,053 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 5,788 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 694 நபர்கள் வைரஸ் தொற்று சந்தேகத்தில் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.