மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த, கைதி படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ்.
இதன்பின் விஜய்யுடன் கைகோர்த்த இவர் மாஸ்டர் எனும் படத்தை இயக்கினார். இதை தொடர்ந்து விக்ரம் எனும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். தற்போது மீண்டும் விஜய்யுடன் லியோ படத்தின் மூலம் கைகோர்த்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு, லியோ படம் மற்றும் விஜய் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அந்த பேட்டியில் பேசி வந்த லோகேஷ், 10 படத்திற்கு மேல் நாள் இயக்க மாட்டேன், சினிமாவில் இருந்து விலகிவிடுவேன் என கூறினார். இவர் இப்படி கூறியதை கேட்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.