2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 20 ஆம் திகதி அதாவது இன்று நிகழவுள்ளது.
இந்த அரிய கலப்பு கிரகணம் காலை 07.04 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 வரை நிகழும். கிரகணத்தின் மொத்த கால அளவு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக இருக்கும்.
துரதிர்ஷ்டவசமாக இந்த வானியல் நிகழ்வை இந்தியாவில் காண கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பமாக இருப்பவர்கள் சூரிய கிரகணத்தின் போது வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்றும் பழங்கள், பூக்கள், இலைகள் ஆகியவற்றை பறிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது, பெண்கள் வளையல்கள், ஊசிகள் போன்ற உலோகப் பொருட்களை அணிய வேண்டாம் கர்ப்பிணிப் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது சாப்பிடுவது அல்லது குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் போது யாரும் பசியை அனுபவித்தால், அவர்கள் புதிய பழங்களை உட்கொள்ளலாம். கர்ப்பிணிகள் கிரகணத்தின் போது தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
உங்கள் வீட்டிற்குள் கதிர்கள் நுழையாதவாறு ஜன்னல்களை அடர்த்தியான திரைச்சீலைகளால் மூடி வைக்கவும். மேலும் கிரகண காலம் முடிந்தவுடன் பெண்கள் குளிப்பது நல்லது.
கர்ப்பிணி நோயாளிகள் தங்கள் வயிற்றைத் தொடக்கூடாது. கிரகணத்தின் போது உணவு சமைக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.