கொழும்பில் இந்திய பிரஜை ஒருவர் 300,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு -2 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்புகளை தருவதாக கூறி பலரிடம் சந்தேக நபர் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 300,678 அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாக இந்த நபர் மீது பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.