தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லும் போது பொலிஸ் வாகனத்தில் காண்டீபன் மற்றும் சட்டத்தரணியும் சென்ற விடயம் தொடர்பில் Visitharan Praisoody என்பவர் முகநூலில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று முன் தினம் கொழும்பில் கைதுசெய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
இவ்வாறான நிலையில் முகநூலில் குறித்த நபர் வெளியிட்ட கருத்து,
கஜேந்திரகுமார் அவர்கள் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லும் பொலிஸ் வாகனத்திலே காண்டீபன் ஒருவர் போகிறார். ஆனால் காண்டீபன் கைது செய்யப்பட்டதாக எந்த ஒரு செய்திகளையோ, பதிவுகளையோ வரவில்லை.
அதே நேரம் பொலிஸ் வாகனத்தில் கைது செய்யப்பட்டவருடைய சட்டத்தரணியும் சேர்ந்து போனமாதிரி் இதுவரை நான் அறிந்ததும் இல்லை.
இப்ப எனக்கு இருக்கிற கேள்வி என்ன என்றால் காண்டீபன் என்ன அடிப்படையில் பொலிஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டார்.
இலங்கை சட்டத்தில் ஏதும் மாற்றம் வந்திட்டா? ஏன் கேட்கிறன் என்றால் அடுத்தமுறை யாரும் தமிழ் தேசிய வாதிகள் கைது செய்யப்படும் போது அதே வாகனத்தில் யாரும் ஒரு சட்டத்தரணியை அனுப்பி வைக்கத்தான் வேறு ஒன்றும் இல்லை என பிரித்தானியாவில் வாசிக்கும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட அரசியல் பிரமுகர் Visitharan Praisoody என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

