ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தேசிய பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு இன்று (09) அறிவித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, அந்த வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.