பூப்பந்தாட்டத்திலே யேர்மன் நாட்டில் முதல் தர போட்டிகள் இடம்பெறும் பல பகுதிகளிலும் தனது மிக இளைய வயதிலேயே கால் பதித்து வரும் தமிழி மார்க்கண்டு (11 வயது பிரிவில்) 3-4.6.2023 நாட்களில் ஹோவல் கோப் Hövelhof இல் இடம்பெற்ற சுற்றுப் போட்டியில் தனது வயது அணியினரிடையே முதலாவது இடத்தை வென்று சாதித்துள்ளார். விடா முயற்சியுடன் தொடர் பயிற்சியில் சளைக்காது தனது வெற்றிப்படிகளில் முன்னேறி முழு யேர்மன் . அளவில் தரவரிசையில் 2 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ள இந்த இளைய ஈழத்து வீராங்கணையிடம் இன்னும் தொடர்வெற்றிகளை தமிழுலகம் எதிர்பார்த்து நிற்கிறது.