பிரபாஸ் நடிப்பில் ராமாயண கதை தற்போது அதிபுருஷ் என்ற பெயரில் படமாக்கப்பட்டு இருக்கிறது. அதன் டீஸர் கடந்த வருடம் வெளியானபோது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதனால் படத்தின் கிராபிக்சில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
வரும் ஜூன் 16ம் தேதி அதிபுருஷ் படம் திரைக்கு வர இருக்கிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஜந்து மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் சீதையாக நடிகை க்ரித்தி சனோன் நடித்து இருக்கிறார். “தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா போன்ற நடிகைகளை தாண்டி எனக்கு இந்த வாய்ப்பு வந்திருக்கிறது. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நடக்கும்.”
“இந்த படம் நடிப்பதைக்காக நான் அசைவம் சாப்பிடாமல் இருந்தேன். எப்போதும் மாடர்ன் ஆக இருக்கும் நான் இந்த படத்தின் ஷூட்டிங் முடியும் வரை சேலை தான் அதிகம் அணிந்துகொண்டிருந்தேன்” என கூறி இருக்கிறார்.