தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சிரஞ்சீவி. இவருடைய தம்பி தான் நாகேந்திர பாபு.
இவரும் திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்கள் ஒருவர் ஆவார். இவருடைய மகன் தான் வருண் தேஜ். இவர் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர்.
இவருக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மணப்பெண் வேறு யாருமில்லை பிரபல நடிகை லாவண்யா திரிபாதி தான்.
ஆம், தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வரும் லாவண்யா திரிபாதி மற்றும் நடிகர் வருண் தேஜ் இருவரும் காதலித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்கள். இதற்கான திருமண வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

