அட்லீ தளபதி விஜய்யை வைத்து பல ஹிட் படங்கள் கொடுத்தவர். அவர் தற்போது பாலிவுட் சினிமாவில் களமிறங்கி ஷாருக் கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
அந்த படத்தை முடித்தபிறகு அட்லீ மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்கப்போகிறார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் விஜய் 68 படத்தினை அட்லீ இயக்கப்போவதில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. அட்லீ மீண்டும் ஒரு ஹிந்தி படத்தினை தான் இயக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது. அதில் பாலிவுட் நடிகர் வருண் தவான் தான் ஹீரோவாக நடிக்க போகிறாராம்.
அட்லீ ரேஸில் இருந்து விலகி இருக்கும் நிலையில் தற்போது தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் அல்லது இயக்குனர் வெங்கட் பிரபு உடன் விஜய் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது என தகவல் பரவி வருகிறது.
வெங்கட் பிரபு சமீபத்தில் இயக்கிய கஸ்டடி படம் தற்போது கலவையான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது. அதனால் தளபதி68 பட இயக்குனராக யாரை விஜய் தேர்வு செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.