விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாக செய்தி கூறுகிறது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதனாலேயே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
வருகிற அக்டோபர் மாதம் வெளிவரவிருக்கும் இப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் ஒரு அப்டேட் வெளியாகிக்கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது லியோ திரைப்படம் ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தின் சாயலில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பாட்ஷா படத்தில் மிகப்பெரிய டானாக இருந்த ரஜினி எப்படி தனது குடும்பத்திற்காக அனைத்தையும் மறைத்துவிட்டு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருவாரோ அதே போல் லியோ திரைப்படத்தில் விஜய்யும் இருப்பார் என கூறுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை.


