மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழா பிரித்தானியாவையே மனம் மகிழச் செய்துள்ள நிலையில், ராஜ குடும்பத்தில் சிலருக்கு மட்டும் அது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதை மறுப்பதற்கில்லை.
மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில், மன்னர் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இல்லை
அவர்கள், மன்னருடைய இளைய மகனான இளவரசர் ஹரி, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள், மன்னர் சார்லசுடைய தம்பியாகிய இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அவரது குடும்பத்தினர்.
நாளை வரலாற்றில் இந்த புகைப்படம் குறித்து எதிர்மறையாக பேசப்படலாம். மன்னருடைய முடிசூட்டுவிழாவில், அவரது நெருங்கிய குடும்பத்தினர் சிலர் ஏன் இடம்பெறவில்லை என எதிர்கால சந்ததியினர் கேள்வி எழுப்பக்கூடும்.
ஆக, மன்னருடைய அதிகாரப்பூர்வ முடிசூட்டுவிழா புகைப்படங்கள், வரலாற்றில் நீங்கா வடுவாக நிலைக்க இருக்கின்றன.
மன்னருடைய முடிசூட்டுவிழாவில் அவரது பக்கபலமாக நிற்கவேண்டியவர்கள் அவரது தம்பியும், இளைய மகனும். ஆனால், அவர்கள் யோசிக்காமல் செய்த தவறுகள், இன்று மாறா துயரத்தை உருவாக்கிவிட்டன.
ராஜ குடும்ப மரபுக்கு மாறாக, விவாகரத்து பெற்ற, நடிகையான ஒரு பெண்ணை ராஜ குடும்பத்துக்குள் கொண்டு வந்த இளவரசர் ஹரி, அதன் தொடர்ச்சியாக உருவான பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல், ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினார்.
தான் ஒரு இளவரசர், மன்னராக முடிசூட்டப்பட இருப்பவரின் தம்பி என்னும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல், மோசமான நபர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, வயது வராத இளம்பெண்ணுடன் பாலுறவு கொண்டதாக செய்திகள் வெளியாகி, ராஜ குடும்பத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தியதால் ராஜ குடும்பத்தைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டார் இளவரசர் ஆண்ட்ரூ.
ஆக, இருவரும் பொறுப்பில்லாமல் செய்த செயல்கள், அவர்கள் பிரித்தானிய வரலாற்றில் கரும்புள்ளிகளாக நினைவுகூரப்படும் ஒரு நிலையை உருவாக்கிவிட்டன.