கிளிநொச்சியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி உருத்திபுரம் கூழாவடி பகுதியில் இன்றைய தினம் மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மணல் ஏற்றும் விவகாரம் தொடர்பில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடே வாள் வெட்டில் முடிவடைந்ததாகவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.