பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சன் தனது காதலி கரி சைமன்ட்ஸினை இரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
56 வயது பொறிஸ்ஜோன்சன் 33வயது கரிசைமன்ட்ஸினை திருமணம் செய்துகொண்டார் என தெரிவித்துள்ள மெயில், பதவியில் இருந்தவேளை திருமணம் செய்து கொண்ட முதலாவது பிரதமர் பொறிஸ்ஜோன்சன் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
வெஸ்ட்மினிஸ்டர் கத்தீட்ரலில் திருமணம் இரகசியமாக இடம்பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவசர அவசரமாக அழைக்கப்பட்ட 30 பேருடன் திருமணம் இடம்பெற்றது என மெயில் தெரிவித்துள்ளது.
திருமண ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக சிறிய எண்ணிக்கையிலான தேவாலய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
பிரதமர் அலுவலகம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.
ஆறுநாட்களிற்கு முன்னர் பொறிஸ்ஜோன்சனும் அவரது காதலியும் திருமணநிகழ்வுகளிற்காக நேரத்தை ஒதுக்குமாறு நெருங்கிய நண்பர்களிற்கு அழைப்பிதல் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆறுமாதகாலமாக தம்பதியினர் திருமணத்திற்காக இரகசியமாக திட்டமிட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.