இலங்கையில் இன்று மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,363 ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவேளை, நாட்டில் இன்று 2,845 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 177,706 ஆக உயர்வடைந்துள்ளது.
இதன்படி, தற்போது நாடு முழுவதும் பல கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளான 30,019 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று இலங்கையில் 2,573 பேர் கொரோனாவிலிலருந்து குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 146,362 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றையதினம் நாட்டில் 2,584 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியான நிலையில், அதில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
நேற்று கொழும்பு மாவட்டத்தில் 429 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கம்பஹாவில் 415 பேருக்கும், களுத்துறையில் 356 பேருக்கும், நுவரெலியாவில் 162 பேருக்கும், இரத்தினபுரியில் 156 பேருக்கும், காலியில் 155 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனிடையே கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணியின் பிரதானி இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று முதல் காலி, குருணாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.