தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டால் இரண்டு வாரங்களுக்குள் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளை நிறைவு செய்ய முடியும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்தது.
அதன்படி தமது பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வுகளை வழங்க அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று சங்கம் குறிப்பிட்டது.
இந்நிலையில் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, செயற்குழு கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (25) நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.