நாளை அனைத்து இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாண நீதி மன்றில் ஆஜராகுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பான வணிக கழகத்தின் தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார்.
நல்லை ஆதீனத்தில் இந்து அமைப்பு பிரதிநிங்களுடன் இடம்பெற்ற சந்தித்தின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது சில தினங்களுக்கு முன்னர் பண்ணை சுற்றுவட்டப் பகுதிக்கு அண்மையில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாரால் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம் மனு மீதான விசாரணை நாளை யாழ்ப்பாண நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த அம்மன் சிலை தொடர்பிலான கலந்துரையாடலொன்று மாலை 4.30 மணியளவில் நல்லை ஆதீன மண்டபத்தில் நல்லை, ஆதீன சுவாமிகள் தலைமையில் ஆரம்பமாகி 2 மணித்தியாலத்திற்கு மேலாக இடம்பெற்ற கலந்துரையாடலில் ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.
இதேவேளை கலந்துரையாடல் நிறைவில் பண்ணை சுற்றுவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள நாகபூசணியம்மன் சிலைக்கு கலந்துரையாடலில் ஈடுபட்டோர் மலர் மாலை அணிவித்து தூப தீபங்காட்டி வழிபட்டனர்.
மேலும் இக் கலந்துரையாடல் மற்றும் வழிபாட்டு இந்து சமயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.