குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இன்று இம்யூனிட்டி சுற்று நடைபெற்றது. இதில் கடந்த சீசன்களில் இருந்து ஷகீலா, ரோஷினி மற்றும் ரேகா என மூன்று போட்டியாளர்கள் வந்திருந்தனர்.
சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் இம்யூனிட்டி வென்றுவிட்டால் இம்யூனிட்டியை வென்ற நபர் அடுத்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்துவிடுவார்.
ஆனால், மற்ற சீசன்களில் இருந்து வந்துள்ள மூன்று போட்டியாளர்களில் யாரவது ஒருவர் இம்யூனிட்டியை வென்றுவிட்டால் சீசன் 4ல் உள்ள அனைத்து போட்டியாளர்களும் அடுத்த வாரம் நேரடியாக எலிமினேஷன் சுற்றுக்கு செல்வார்கள் என நடுவர்கள் கூறினார்கள்.
இந்த இம்யூனிட்டி சுற்று முதலாவதாக நடைபெற்ற அட்வான்டேஜ் டாஸ்க்கில் ரோஷினி மற்றும் குரைஷி வென்றனர்.
வெளியேறுகிறேன் என கூறிய சிவாங்கி
இதன்பின், இன்று நடைபெற்ற இம்யூனிட்டி டாஸ்க்கில் முதல் சுற்றை நன்றாக சமைத்து அதிக மதிப்பெண்களை பெற்ற நான்கு போட்டியாளர்கள் இரண்டாம் சுற்றுக்கு சென்றார்.
விசித்திரா, சிவாங்கி, ஷகீலா மற்றும் ஷெரின் ஆகியோர் அதிக மதிப்பெண்களுடன் இரண்டாம் சுற்றுக்கு சென்றனர். இதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு காய்கறி சமைக்க கிடைத்தது.
ஆனால், சிவாங்கி தனக்கு பாவற்காய் வந்துவிட்டது என்றும், தன்னால் பாவற்காய்யை சமைக்க முடியாது என்றும் கூறினார். மேலும் இந்த இம்யூனிட்டி சுற்றில் இருந்து நான் வெளியேறிக்கொள்கிறேன் என்றும் கூறினார்.
கோபமடைந்த நடுவர்கள்
இதனால் கோபமடைந்த நடுவர்கள் பாவற்காய்யை வைத்து நீ சமைத்து ஆகவேண்டும் என கூறிவிட்டனர். இதனால் வருத்தமடைந்த சிவாங்கி நிகழ்ச்சியின் இறுதி வரை முகம் வாடியே காணப்பட்டார்.
ஆனால், தனக்கு கிடைத்த பாவற்காய்யை வைத்து நன்றாக சமைத்து நடுவர்களிடம் இருந்து நல்ல கமெண்ட்ஸ் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவாங்கி பாவற்காய்யை வைத்து நான் சமையல் செய்யமாட்டேன் என்று கூறுவதற்கு காரணம் இருக்கிறது.
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் நடைப்பெற்ற டாஸ்க் ஒன்றில் சிவாங்கிக்கு பாவற்காய் தான் கிடைத்தது. ஆனால், அதை அவரால் சரியாக செய்யமுடியவில்லை. அதனால் தான் இப்படி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று நடைபெற்ற இம்யூனிட்டி சுற்றில் நடுவர்களிடம் இருந்து நல்ல மதிப்பெண்களை பெற்று ஷகீலா வென்றுள்ளார்.
இதன்முலம், தற்போதைய சீசன் 4 போட்டியாளர்களாக இருக்கும் ஷெரின், விசித்திரா, சிவாங்கி, மைம் கோபி, ஆண்ட்ரியன், ஸ்ருஷ்டி என அனைவரும் அடுத்த வாரம் நேரடியாக எலிமினேஷன் சுற்றுக்கு சென்றுவிட்டனர்.