மேஷம்: பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள் . புது நட்பு மலரும். வியாபாரத்தில் அதிரடிமாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத்தருவார்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உற்சாகமானநாள்.
மிதுனம்:
மற்றவர்களை நம்பி எந்தவேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
கடகம்
கடகம்: நண்பர்களின் ஆதரவுகிட்டும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைப் பற்றிஅவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். கடின உழைப்பால் வெல்லும் நாள்.
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். புதுவாகனம் வாங்குவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.
கன்னி
கன்னி: இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். மகிழ்ச்சியான நாள்.
துலாம்
துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். உறவினர்கள் நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகரிகளிடம் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
தனுசு
தனுசு: சொன்ன சொல்லைகாப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சியை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.
மகரம்
மகரம்: புதிய பயணத்தை தொடங்குங்கள். பழைய உறவினர்நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நம்பிக்கை உறுதியாக ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள்.வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதுஇடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும்நாள்.
கும்பம்
கும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.
மீனம்
மீனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் பல கிரகங்களும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.