இன்று திங்கட்கிழமை காலை பெண் ஒருவர் சுத்தியலால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று மே 24 ஆம் திகதி காலை பெண்ணின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. Arpajon (Essonne) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அங்கு 30 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக இருப்பதை பார்த்துள்ளனர்.
அவர் சுத்தியலால் அடித்து கொல்லப்பட்டுள்ளார் எனவும், தலையில் சுத்தியலால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்ததாகவும், எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் மற்றுமொரு பெண் தொடர்புபட்டுள்ளார் எனவும், மோதலை தடுக்க முற்பட்ட அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. வாக்குவாதம் ஒன்றின் முடிவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், தாகுதல் தொடர்பான முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பெண்ணுக்கு 2.5 வயதில் ஒரு பெண்ணும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளார். அவர்கள் காவல்துறையினரால் மீட்க்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.