தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடி முடிந்த பிக்பாஸ் சீசன் 6 யில் போட்டியாளராக கலந்துகொண்டவர்தான் இலங்கைப் பெண் ஜனனி.
பிக்பாஸ் வீட்டில் சுட்டித்தனமான நடிப்பையும், திறமையான விளையாட்டையும் வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே சம்பாதித்தார்.
இவ்வாறு இருக்கையில் யாரும் எதிர்பாராத நிலையில் எவிக்ஷனில் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
இதனையடுத்து லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கிய காதப்பத்திரத்தில் ஜனனி நடித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதுமட்டுமன்றி அமுதவானன் தனலட்சுமியுடன் எடுத்த லேட்டஸ் புகைப்படம் மற்றும் அவரின் நண்பி ஒருவருடன் எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார.
குறித்த வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது வரலாகி வருகின்றது.