பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிகம் பாலில் குங்குமப்பூ கலந்து எடுத்து கொள்வார்கள். இந்த பூவை குடிப்பதால் பிள்ளைகள் வெள்ளையாக பிறக்கும் என்பது அவர்களின் கணிப்பு.
மேலும் இந்த பூக்கள் கிடைப்பது அரிது என்பதால் இதன் விலையும் நாடுக்கு நாடு வேறுபடுகிறது. அந்த வகையில் குங்குமப்பூவை எடுத்து கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
குங்குமப்பூ சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
1. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஆறு மாதம் கடந்த பின்னர் குங்குமப்பூவை பாலில் கலந்து வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் குழந்தை ஆரோக்கியமாகவும் வெண்மையாகவும் பிறக்கும்.
2. பாலில் அதிகமான குங்குமப்பூ சேர்த்தால் அது தலைச்சுற்றல், வயிற்றுவலி போன்ற நோய்களை ஏற்படுத்தும்.
3. குங்குமப்பூ அதிகமாக எடுத்து கொள்வோருக்கு காலப்போக்கில் ஆசன வாயில் இரத்தக்கசிவு, மூக்கில் இரத்தம் வருதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
4. மஞ்சள் காமாலை நோய்க்கு இதனை மருந்தாக பயன்படுத்துவார்கள். ஆனால் இதன் தாக்கம் சிலருக்கு நோயை அதிகப்படுத்தி விடும்.
5. மாங்கனீசு சத்து குங்குமப்பூவில் அதிகம் இருக்கிறது. இதனால் ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகும்.