12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சிறார்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியது முக்கியமானது என சிறுவர் நோய் தொடர்பிலான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் காலத்தில் கொரோனா வைரஸ் சிறுவர்களுக்கு ஏற்படும் சாத்தியம் காணப்படுகின்றமையினால், சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.
நாட்டில் இதுவரை 1000திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் 5 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
கொவிட் 3வது அலையில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதனால் சிறுவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும், உரிய சுகாதார நடைமுறைகளை சிறுவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் எனவும் சிறுவர் நோய் தொடர்பிலான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார்.