கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளான நோயாளியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
நெல்லியடி சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது ,
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி வழியாக கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரை வைத்திய சாலைக்கு நோயாளர் காவு வண்டியில் அழைத்து சென்று கொண்டிருந்த வேளை நெல்லியடி சந்தியில் முன்னே சென்று கொண்டிருந்த கார் திடீரென மற்றைய வீதிக்கு திரும்பிய போது விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் காரையும் , நோயாளர் காவு வண்டியையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றதுடன் , நோயாளியை பிறிதொரு நோயாளர் காவு வண்டியை அழைத்து அதில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.