யாழ்ப்பாணம் காரைநகரில் திருமண கலப்பு ஒன்றின் பின்னர் கூழ்காய்சிக் குடித்த ஒன்பது பேர் இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
காரைநகரில் ஒரு வீட்டில் பலர் சேர்ந்து கூழ் காய்ச்சிக் குடிப்பதாக சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.
சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற சுகாதார உத்தியோகத்தர்கள் கூழ் காய்ச்சிக் குடித்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேரை அடையாளம் கண்டதுடன் அவர்களை சுயதனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பந்தக்கலப்பு ஒன்றின் பின்னரே தாம் கூழ் காய்ச்சியதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனிடையே அவர்களிடம் கூழ் வாங்கிப் பருகியதாக பொலிஸார் இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் நம்பகரமாக தெரியவந்துள்ளது