கொரோனா வைரஸ் காரணமாக இன்று நூற்றுக்கும் குறைவான மரணங்கள் சம்பவவித்துள்ளன. 2021 ஆம் ஆண்டில் முதன்முறையாக நாள் ஒன்றில் நூற்றுக்கும் குறைவான மரணங்கள் சம்பவித்துள்ளது. இன்று மே 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 81 பேர் சாவடைந்துள்ளனர். இறுதியாக கடந்த வருடம் ஒக்டோபர் 118 ஆம் திகதி 85 பேர் சாவடைந்திருந்தனர். அதன் பின்னர் மீண்டும் இன்று கிட்டத்தட்ட 7 மாதங்களின் பின்னர் இந்த சாவு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
பிரான்சில் இதுவரை நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய கொரோனா மரணம் ஏப்ரல் 7 ஆம் திகதி பதிவானதாகும். அன்றைய தினம் 1.417 பேர் சாவடைந்திருந்தமமை குறிப்பிடத்தக்கது.