பேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை அன்றாடம் உண்ணும் பழக்கம் கொண்டிருந்தனர்.
இது ஓர் அரும்பெரும் மருத்துவ உணவாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடற்சக்தியை வலுப்படுத்த பேரிச்சம் பழம் உதவுகின்றது.
பெண்கள் தொடர்ந்து 10 நாட்கள் தினமும் இரண்டு பேரிச்சம்பழம் உண்டு வர முடிவு செய்தார். 10 நாட்களின் முடிவில், இந்த பெண்மணியின் உடல் மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மருத்துவர்களே வியக்கும் அளவிற்கு இருந்தது.
தினமும் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்
தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் 10 நாட்கள் கழித்து பெண்ணிடம் ஆரோக்கிய மாற்றங்கள் ஏற்படும்.
👉10 நாட்களுக்கு தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்ததால், குடல் இயக்கம் சிறப்பாக இருக்கும்.
👉10 நாட்களில் செரிமானம், வாயுத்தொல்லைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
பேரிச்சம் பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, பெருங்குடல் சார்ந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
👉பேரிச்சம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம், சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாக சிறந்து விளங்கும்.
👉இது வலிநிவாரணியாகவும், கை கால் வீக்கத்தை குறைக்கவும் பெருமளவு உதவி செய்யும்.
👉பேரிச்சம் பழத்தில் இருக்கும் மெக்னீசியம் இதய நோய்கள் ஏற்படுவதையும் குறைக்கும்.
பேரிச்சம்பழத்தில் இருக்கும் உயர்ரக மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
👉இதய நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் உதவி செய்யும். தொடர்ந்து பேரிச்சம்பழம் உண்டு வருவது 10% ஸ்ட்ரோக் அபாயத்தை குறைக்கும்.
👉பேரிச்சம்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவிக்கும். இதனால், ஞாபகசக்தி மற்றும் கவனம் செலுத்துதல் அதிகரிக்கும்.
👉மேலும், கர்ப்பிணிப்பெண் வலி இன்றி சுகப்பிரசவம் அடைய, கடைசி மாதம் தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வரலாம் என கூறப்படுகிறது.
👉பேரிச்சம்பழம் பிரசவத்திற்கு பிறகான உடல் எடையை குறைக்கவும் பலனளிக்கும்.
அரும்பெரும் நன்மைகளை அளிக்கும் பேரிச்சம் பழத்தை தினமும் இரண்டு சாப்பிட்டு வர மறக்க வேண்டாம்.
பேல்பூரி, காளான், பெப்ஸி, கோலாவிற்கு செலவழிப்பதை, நல்லவழியில் செலவழித்து ஆரோக்கியம் மேன்மையடைய முயற்சி செய்ங்க