தினசரி இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமுலாகும் தினத்தை அரசாங்கம் விரைவில் அறிவிக்கவுள்ளது.
எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு ஊரடங்கு உத்தரவு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் பொருட்கள் கொள்வனவுக்காக வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் சென்று வர அனுமதி வழங்குவதும், அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நாட்களை ஒதுக்கிக்கொடுப்பது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிடைத்த தகவலின் படி இந்த ஊரடங்கு உத்தரவு நாளை முதல் அமுலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.