40 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25) காலை இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது.
இதன்போது அரசின் புதிய வரிக் கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்சங்கத்தின் 40 அங்கத்துவ தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் இணைந்துள்ளனர்.