நாம் வைக்கும் உணவில் நறுமணத்திற்காக, பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்களில் கரு வேப்பிலையும் ஒன்று. ஆனால் பெரும்பாலானோர் இந்த கருவேப்பிலையை விரும்பி சாப்பிடுவதில்லை.
கருவேப்பிலையை கண்டவுடன் தூக்கி எறிந்துவிடுவார்கள். கரு வேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது.
இப்படிப்பட்ட கருவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்
வெறும் வயிற்றில் கரு வேப்பிலையை நாம் உட்கொள்வதன் மூலம் உடலில் நல்ல செறிமானம் அடையும். செரிமான நொதிகளைத் தூண்டுவதுடன் குடல் இயக்கத்தை செயல்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கும்.
முடி வளர்ச்சி
நம்முடைய வீட்டில் தாய்மார்கள் சிலர் தேங்காய் எண்ணெய்யில் கரு வேப்பிலை சேர்ப்பதை நாம் பார்க்க முடியும். அதற்கு முக்கிய காரணம் கரு வேப்பிலை முடி உதிர்தலை எதிர்த்து போராட உதவுகிறது.
ஒரு கிளாஸ் தண்ணீர் காலையில் குடித்தவுடன், சில நிமிடங்களுக்குப் பிறகு, நீங்கள் சில புதிய கறிவேப்பிலை மெல்லலாம். இலைகளை சரியாக மென்று, காலை உணவை சாப்பிடுவதற்கு முன் குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருக்கவும்.
கரு வேப்பிலையில் வைட்டமின் சி, பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் மற்றும் நிகோடினிக் அமிலம் நிறைந்துள்ளது. கரு வேப்பிலையின் இலைகளின் மேற்பூச்சு முடி உதிர்தலை எதிர்த்துப் போராட உதவும்.
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் வளர்வதை உங்களால் உணர முடியும்.
எடை குறைய
கருவேப்பிலையை தினமும் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வருவதன் மூலம், சிறந்த செரிமானம் அடைந்து, நச்சுத்தன்மை மற்றும் மேம்பட்ட கொழுப்பு போன்றவற்றை வெளியேறுவதால், உடல் எடை குறைவதை நாம் காண முடியும்.
காலையில் வரும் நோய்களை குணப்படுத்த
காலை நோய் மற்றும் குமட்டலுக்கு சிறந்த தீர்வுகளில் ஒன்று கறிவேப்பிலை. இது செரிமானத்தை அதிகரிப்பதால், இந்த பிரச்சனைகளை இது குணப்படுத்த உதவுகிறது.
சளித் தேக்கம்
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்