தமிழ் சினிமாவைப் காதல் மன்னனாக தோன்றி இளம் பெண்களின் கனவு நாயகனாக திரையுலகில் வலம் வருபவர்தான் நடிகர் மாதவன்.
இவர்’அலைபாயுதே’ என்ற படத்தில் மாதவனின் கதாபாத்திரமும் அவருடைய தோற்றமும் பெண்களை கவரும் வகையில் வெகுவாக அமைந்திருந்தது.
இந்நிலையில் ஒரே படத்தில் தமிழக பெண்களின் கனவு நாயகனாக மாதவன் மாறினார். இதனைத்தொடர்ந்து ரசிகர்களால் சாக்லேட் பாய் என அழைக்கப்பட்டு வந்தார்.
இவ்வாறான நிலையில் மாதவனுக்கு வேதாந்த் மாதவன் எனும் ஒரு மகன் இருக்கிறார். மாதவனின் மகன் வேதாந்த் இந்தியளவிலும், சர்வேதேச அளவிலும் நடக்கும் நீச்சல் போட்டியில் பங்கேற்று பல விருதுகளை வென்று வருகிறார்.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட வேதாந்த் மாதவன் 3 தங்க பதக்கங்களையும், 2 வெள்ளி பதக்கங்களையும் வென்று சாதனை படைத்திருக்கின்றார்.
இந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு நடிகர் மாதவன் செய்துள்ளார்.
மேலும், வேதாந்த்தின் சாதனையைப் பாராட்டி திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் வேதாந்த் மாதவனுக்கும், அவரை ஊக்குவித்த குடும்பத்தினருக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.