பணம் மோசடி புகாரில் பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரி நாடாரை கேரளாவில் வைத்து பெங்களூர் குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா பாஜக தொழிலதிபருக்கு சுமார் 150 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி 16 கோடி ரூபாய் வரை கமிஷன் பெற்ற விவகாரத்தில் பொலிசார் ஹரிநாடாரை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஹரி நாடார் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாக ஹெல்மெட் சின்னத்தில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆலங்குளத்தில் 73,846 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனம் வெற்றிப்பெற்றார். திமுக வேட்பாளர் பூங்கோதை 69,325 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
சுயேச்சையாக போட்டியிட்ட ஹரி நாடார் 37,727 வாக்குள் பெற்று 3வது இடத்தை பிடித்து டெபாசிட் பெற்றார். திமுக வேட்பாளர் பூங்கோதை தோல்விக்கு ஹரி நாடார் தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.