கொழ்ம்பில் உயிரிழந்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம் தொடர்பான தகவல்கள் அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் டிரான் அலஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை மரணம் தொடர்பான விசாரணைகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ளதாகவும், இது கொலையா அல்லது தற்கொலையா எனக் கூற முடியாது எனவும் அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.