இளையதளபதி விஜய் உள்ளிட்ட பிரபலாமான நடகர்களுடன் நடித்துள்ள நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி விடுமுறையில் இலங்கைக்கு வந்துள்ளார்.
‘லெட்ஸ் லங்கா’ என தனது விடுமுறையை அழைத்த ஆஷிஷ் வித்யார்த்தி அது தொடர்பில் வெளிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
அக்காணொளியில் இலங்கை ஒரு அழகான நாடு என வர்ணித்த நடிகர் தனது ரசிகர்களையும் நலம் விரும்பிகளையும் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆஷிஷ் வித்யார்த்தி இலங்கையை சர்வதேச ரீதியில் மேம்படுத்துவதற்கும் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்கும் அவர்களின் சர்வதேச செல்வாக்கு வசதி திட்டத்தின் கீழ் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தால் அழைக்கப்பட்டுள்ளார்.