புதுக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் வழியில், தமிழ் மக்களுக்காய் தன்னை அர்ப்பணம் செய்துள்ள முன்னாள் போராளி.!!!
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மெளனித்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தும், தமிழர்களின் நிலையான இருப்பென்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் ஒற்றுமையின்றி தனித்தனியே தேவைக்கேற்றாப்போல் தத்தம் அரசியலை வெவ்வேறு கோணங்களில் முன்னெடுப்பதை காண முடிகின்றது.
இவ்வாறான செயற்பாட்டால் ஒட்டுமொத்தமாக பாதிப்பட்டுள்ளது தமிழ் மக்களே. இவ்வாறான நிலை எதிர்வரும் காலங்களிலும் தொடருமாக இருந்தால் தமிழ் மக்களை கடவுளால்கூட காப்பாற்ற முடியாத நிலையே உருவாகும் என்பதே நிதர்சனம்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
இவற்றை கருத்தில்கொண்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளியும் மூன்று மாவீரர்களின் சகோதரனும், தந்தையையும் நாட்டுப்பற்றாளராகவும் விலைகொடுத்த சமூகச் செற்பாட்டாளரான வே.மாதவமேஜர் (எடிசன்) அவர்கள் மக்களையும் மண்ணையும் தீவிரமாக காதல் செய்தவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கைமைய, 09.01.2023 அன்று
தேசியத்தை நேசிக்கும் அனைவரையும் ஒன்றுசேர்க்கும் முகமாக புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் குறித்த இளைஞன் ஈடுபட்டுள்ளார்.
குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞன் கருத்து தெரிவிக்கையில்,
எனது அன்பான மக்களே!
இந்த தருணத்தில் எனது உயிரையும் நான் இழக்க நேரிடலாம். அல்லது நோய் வாய்ப்படலாம். அல்லது சிறைக்கும் செல்லலாம். எனவே எதையும் நான் எதிர்கொள்வேன் என்ற உயரிய நம்பிக்கையில் நான் இந்த இலட்சிய பயணத்தை தொடங்கியுள்ளேன்.
எனது அன்பான மக்களே! எனது இந்த முடிவுக்கு என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
இது எனது தனிப்பட்ட உணர்வுபூர்வமான முடிவு.
எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனது
இந்த போராட்டத்தை இடைநிறுத்த முயற்சிக்காதீர்கள்.
நான் என்ற எண்ணம் அற்று நாம் என்ற உணர்வுடன் வாழ்பவர்கள் நாங்கள். எனவே
கசப்பான நினைவுகளை தூக்கி எறிந்து உணர்வுமிக்க மக்களாக எல்லோரும் ஒற்றுமையுடன் ஒன்றுபடுமாறு
அன்புரிமையோடு கேட்டுகொள்கின்றேன்.
வாழ்வியல் பயணத்தில் நாம் போராடித்தான் பல வரலாறுகளை படைத்துள்ளோம் அதேபோல் இதுவும் ஓர் வரலாற்றுப் பதிவாகவும். எமது இனத்தின் அரசியல் பலத்தின் திருப்பு முனையாகவும் இருக்கும் என நான் நம்புகின்றேன்.
எனது முடிவு எனக்கு சந்தோசத்தை தருகிறது. இதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், குறித்த இளைஞனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதுடன்,இன்றும் மூன்றாம் நாளாகவும் குறித்த விண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது
இப் போராட்டத்திற்கு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் தமது பூராண ஆதரவை வழங்கிநிற்பதோடு,அரசியல் பிரமுகர்கள் ஒரு சிலர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்துள்ளதுடன் அப்பகுதியில் இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் ஒன்று கூடி தமது ஆதரவை வழங்கிவருகின்றனர்.