தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் நாம் தமிழ் கட்சியினர் மிகவும் எதிர்பார்த்திருக்கும் அக்கட்சியின் தலைவமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் திருவொற்றியூரில் முன்னிலை நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
2021 தமிழக சட்டமனறத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக-தேமுதிக கூட்டணி, மநீம கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சிய என 5 முனை நிலவுகிறது. தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பிரதான கட்சிகளான அதிமுக-திமுக இடையே போட்டி நிலவிவருகிறது.
குறிப்பாக நாம் தமிழர் கட்சியினர் மிகவும் எதிர்பார்த்திருக்கும் சீமான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் முன்னிலை பெற்றுள்ளர்.
திருவொற்றியூரில் அதிமுக சார்பில் குப்பன், அமமுக சார்பில் சௌந்தர பாண்டியன், மநீம சார்பில் மோகன் ஆகியோர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளதால் அடுத்தடுத்த சுற்று எண்ணிக்கையில் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.