கொக்கல ஏற்றுமதி செயலாக்க வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள், உணவு விஷமானதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொழிற்சாலையின் ஊழியர்களுக்காக நேற்று (02) இரவு இடம்பெற்ற மாநாட்டில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 114 எனவும் அவர்கள் அனைவரும் பெண்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்களில் 30 பேர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது