சாப்பிடும் அனைத்து கீரைகளிலும் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கிறது. அதில் பல கீரைகள் நமது கிராமப்புரங்களில் கிடைக்கிறது. அதில் ஒன்று தான் பிண்ணாக்கு கீரை.
குணப்படுத்தும் நோய்கள்:
வாதம் பிரச்சனை, சிறுநீரகங்கள், நோய் எதிர்ப்பு, நீரிழிவு நோய், கல்லீரல், செரிமான பிரச்சனை, விஷகடி, புற்றுநோய்.
கல்லீரல் பிரச்சனை:
அதிகமாக போதை பழக்கம் உள்ளவர்களுக்கும், தவறான உணவு பழக்கம் உள்ளவர்களுக்கும் கல்லீரல் பிரச்சனை ஏற்படும். அந்த பிரச்சனை தடுப்பதற்கு இக்கீரை மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். முதலில் போதை பழக்கம் மற்றும் நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தவிர்த்து விட்டு இக்கீரை சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
நீரிழிவு நோய்:
பிண்ணாக்கு கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை மிக சிக்கிரமாக குறைத்து விடும். தினமும் சாப்பிடாவிட்டாலும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இக்கீரையை சாப்பிட்டால் மட்டுமே உடனடி தீர்வு கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு:
நாம் வளர வளர நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே வருகிறது. அந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பிண்ணாக்கு கீரை சாப்பிட வேண்டும். அந்த கீரை உடலில் கலந்து நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. மேலும் நோய்களை உண்டாக்கும் நுண்கிருமிகளை அழித்து, நோய்கள் நம்மை அன்டாத படி காக்கிறது.
சிறுநீரகங்கள்:
சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகள் சிறப்பாக செயல்பட பிண்ணாக்கு கீரை உதவுகிறது. மேலும் இக்கீரை சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குகிறது. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்பட பிண்ணாக்கு கீரையை சமைத்து சாப்பிட வேண்டும்.
வாயு தொந்தரவு:
வயிற்றில் வாய்வின் தன்மை அதிகமாகி பல பேருக்கு வாயுக்கோளறுகள் ஏற்படுகிறது. பிண்ணாக்கு கீரை உடலில் உள்ள வாத தன்மை சரிசெய்து வாயு கோளாறுகளை சீர் செய்து உடலை ஆரோக்கிய பெற செய்கிறது. எனவே பிண்ணாக்கு கீரையை சாப்பிட்டு வந்தால் வாய் கோளாறுகள் நீங்கும்.
விஷ கடி:
தேள், பூரான், தேனீ, விஷ வண்டுகள் போன்றவை நம்மை கடித்தால், கடிப்பட்ட நபர் கடிப்பட்ட இடத்தில் பிண்ணாக்கு கீரையின் சாறை விட வேண்டும். அந்த சாறு உள்ளே சென்று விஷத்தை வெளியேற்றும். இது மாதிரி பிரச்சனைகளுக்கு பிண்ணாக்கு கீரையை சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் தீர்வு கிடைக்கும்.
செரிமான பிரச்ச்சனை:
பிண்ணாக்கு கீரையை நன்கு சுத்தம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்று பிரச்சனை, குடல் போன்ற பிரச்சனைகள் நீங்கி உணவு நன்கு செரிமானமாகும்.