சதொச பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ கருத்து தெரிவித்தார்.
சதொச பொருட்களின் விலை அண்மைக் காலமாக பல தடவைகள் குறைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு நன்மையை பெறும் நோக்கில் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (30) இடம்பெற்ற Ada Derana BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்திற்குள் பொருட்களின் விலையை பெருமளவு குறைக்க முடியும் என கணிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.