காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் விஜய்யின் தாயார் ஷோபா சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது,
“எல்லாரும் நல்ல இருக்கணும்’னு வேண்டிக்கத்தான் இங்கு வந்தேன். விஜய் படம் நல்ல ஓடனும்னு எல்லாரும் வேண்டிக்கங்க” என்று கூறினார்.
ஷோபா சந்திரசேகர் மேலும் விஜய்யின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “விஜய் எந்தப் படத்தில் எப்படி நடிக்கிறார் என்றே எனக்கு தெரியாது.
‘வாரிசு’ படத்தில் அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றே எனக்கு தெரியாது. இந்த படம் ஃபேமிலி சப்ஜெக்ட் என்று மட்டும்தான் எனக்குத் தெரியும்.
அவரின் அரசியல் வருகை பற்றி எனக்கோ என் கணவருக்கோ எதுவுமே தெரியாது” என விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.