எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
எதிர்வரும் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த கலந்துரையாடலில் வடக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் அறிவிக்க இணக்கம் காணப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.