பெரும்பாலும் அன்றாட உணவு வகைகளில் பூண்டு முக்கிய பங்கினை வகிக்கின்றது.இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் மசாலாக்களுக்கு சுவையை சேர்க்கிறது.குறிப்பாக அசைவ உணவுகளில் இஞ்சி மற்றும் பூண்டு முக்கியத்துவம் வகிக்கின்றது.
பூண்டு சுவைக்காக உணவுகளில் சேர்க்கப்படுவது மட்டுமின்றி இதில் பலவித மருத்துவ நன்மைகளும் உள்ளது.
தடுமல் மற்றும் காய்ச்சலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது, கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது என பல வகைகளில் பூண்டு பயன்படுகிறது.
பயன்பாடு
பூண்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இருமல், காய்ச்சல், சளி போன்ற நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.காலை நேரத்தில் இரண்டு பல் பூண்டுகளை நசுக்கி சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
உயர் இரத்த அழுத்தம் அதிகளவு இருந்தால் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு போன்றவை ஏற்படும் மற்றும் இது சிறுநீரகத்தையும் பாதிக்கும்.உடலிலுள்ள உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பூண்டு உதவிசெய்கிறது அதனால் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்ள நல்ல நிவாரணம் கிடைக்கும்.
எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு உடலில் அதிகமாக இருந்தால் அது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். தினம் உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலிலுள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் குறைந்து ஆரோக்கியம் மேம்படும் என ஆய்வுகள் காண்பிக்கிறது.
பூண்டில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதனை சாப்பிடுவதால் புற்றுநோய், நீரிழிவு, அல்சைமர் மற்றும் இதய நோய் போன்ற நோய்களின் அபாயம் குறைகிறது.
பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் எலும்புகளில் ஏற்படும் பாதிப்பை பூண்டு சரிசெய்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த பூண்டு சாப்பிடுவது நல்லது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது. அதற்காக பூண்டை நேரடியாக உங்களது முகத்தில் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பூண்டுக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. வீக்கம் அல்லது வலியுள்ள பகுதிகளில் சிறிது பூண்டு எண்ணெயை தடவி மசாஜ் செய்வதன் மூலம் உடனடி பலனை பெறலாம்.