தற்போது நிலவும் மழையின் காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் இன்று (24) காலை 7.30 மணி முதல் நாளை காலை 7.30 மணி வரை அமுலில் இருக்கும் எனவும், அந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.