இந்திய தலைநகர் டெல்லியில் நிறைமாத கர்ப்பிணி மனைவியை கணவர் துடி துடிக்க சுட்டுக்கொன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 27ம் திகதி காலை 10.25 மணியளிவில் நிஜாமுதீன் பகுதியிலே இந்த கொடூர கொலை நடந்துள்ளது.
கொல்லப்பட்ட பெண் 29 வயதுடைய சாய்னா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சாய்னாவின் முதல் இரண்டு கணவர்கள் அவரை விட்டு பிரிந்து வங்க தேசத்திற்கு சென்றதையடுத்து, அவர் மூன்றாவதாக Sharafat Sheikh என போதைப் பொருள் கடத்தல்காரனை திருமணம் செய்துள்ளார்.
Sharafat Sheikh-ஐ NDPS சட்டத்தின் கீழ் பொலிசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து சாய்னா ஒரு வருடத்திற்கு முன் நான்காவதாக வசீம் என்ற நபரை மணந்துள்ளார்.
திருமணம் முடிந்த சில நாட்களுக்குள் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சாய்னா கைது செய்யப்பட்டுள்ளார். சாய்னா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் வசீம், சாய்னாவின் சகோதரியான ரெஹானாவுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், இரட்டை குழந்தைகளுடன் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் சாய்னா சில நாட்களுக்கு முன் ஜாமீனில் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளார்.
சாய்னா விடுதலையானதால் ரெஹானாவுடன் வசீம் பழகுவதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ரெஹானாவுடன் தான் பழகுவது குறித்து வசீம் சாய்னாவிடமே கூறியதாக கூறப்படுகிறது.
தனது சகோதரியுடனான உறவைத் தொடர சாய்னாவை விட்டு விலக வசீம் முடிவு செய்துள்ளார். இதனிடையே தன்னுடைய 3வது கணவரிடம் சம்பவத்தை கூறி உனக்கு தக்க பாடம் புகட்டுவேன் என சாய்னா வசீமை மிரட்டியுள்ளார்.
இதனால் சாய்னாவை கொலை செய்ய திட்டமிட்டு இரண்டு துப்பாக்கிகளை வாங்கிய வசீம், சாய்னாவின் வீட்டிற்கு சென்று வெளியே உட்கார்ந்துக்கொண்டிருந்த சாய்னாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
உடனே சாய்னாவிடம் வேலை செய்பவர் வசீமை தடுத்துள்ளார், எனினும், வேலைகாரனை சுட்டு சாய்த்த வசீம், நிறைமாத கார்ப்பிணி என்றும் பாராமல் பட்டப்பகலில் பலருக்கு முன் சாய்னாவை தலையில் சரமாரியாக சுட்டு சாய்த்துள்ளார்.
A woman named Shaina who had come out of jail on parole two days ago shot dead at her home in Nizamuddin area. Her servant also shot at.
Shaina is the wife of gangster Shafaat and was pregnant.
Killer caught on CCTV camera.
Personal enmity suspected. pic.twitter.com/7cRoUwosx5
— Raj Shekhar Jha (@rajshekharTOI) April 27, 2021
இதில் ரத்த வெள்ளத்தில் சாய்னா அதே இடத்தில் உயிரை விட்டுள்ளார். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் சாய்னாவின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சாய்னாவின் வேலைகாரர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சாய்னாவை சுட்டுக்கொன்ற பிறகு வசீம் நேராக காவல்நிலையம் சென்று சரணடைந்துள்ளார். இந்த கொலையில் சாய்னாவின் சகோதரி ரெஹானாவுக்கு தொடர்பு இருக்கிறாதா என்பது குறித்து பொலிசார் விாசரணை நடத்தி வருகின்றனர்.