7வது இலவச மாலை நேரக் கல்வி நிலையம் ஊறணி பொத்துவில்
திறப்பு விழா
காலம் 22.12.2022
முள்ளி வாய்க்கால் முடிவிற்கு பின் எமது பிரதேசங்களில் போதைப்பொருட்களின் வருகையும் போதைவஸ்த்து பாவனையாளர்களின் அதிகரிப்பு எம்மை கவலைக்குள்ளாக்கியுள்ளது.அன்பானவர்களே!ஒட்டு மொத்தமாக எமது கல்வி கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை
திட்டமிட்டு அளிப்பதற்கு கங்கணம் கட்டி செயல் படுகின்றார்கள். போதைவஸ்த்தினை எமது மாணவச் செல்வங்களை குறிவைத்து மரணத்தின் பிடியில் சிக்க முயற்சிக்கின்றார்கள் நம் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். எமது பிள்ளைகளை நல் வழிப்படுத்துவதற்காக நாம் சிறு முயற்சி எடுத்து வருகின்றோம்.
அதன் தொடர்சியாக இன்று 7வது இலவச மாலை நேரக் கல்வி நிலையம் ஊறணி பொத்துவில் என்னும் கிராமத்தில் மலர்கின்றது
அனைவரும் வாழ்த்துக்களையும் ஆதரவையும் தருவீர்கள் என்று நம்புகின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.