பீட்ரூட்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன. பீட்ரூட்டை சாப்பிடும் பழக்கம் உங்களிடம் இல்லையென்றால் இதை படித்த பிறகாவது அதை கைவிட்டுவிட்டு தினமும் பீட்ரூட் சாபிடுங்கள். அப்படி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
பீட்ரூட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:-
பீட்ரூட்டில் உள்ள பொருள்கள் தமனிச் சுவர்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். எனவே அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட்டை தினமும் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும்.
இதில் பீட்டா சையனின், மற்றும் கரையக்கூடிய நார்ச்சட்த்துகள் அடங்கி உள்ளன. இவை செல்களுக்கு வலுவூட்டவும், இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புகளை கரைத்து நெஞ்சு வலி, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸை குடித்தால் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது. மேலும் களைப்பு மற்றும் உடல் சோர்வு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
இதில் உள்ள சையனின்கள் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி புற்று நோய் வராமல் தடுக்கும்.