இலங்கையில் முதல் தடவையாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.
இன்றைய தினம் இலங்கையில் மொத்தமாக 1096 கோவிட் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கோவிட் நோய்த் தொற்று பரவுகை காரணமாக நாட்டின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 30ம் திகதி வரையில் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.